கோம்பாக் | மார்ச் 30, 2026
காராக் நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் 20 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 7:20 மணியளவில் காராக் நெடுஞ்சாலையின் 25.2 கிலோமீட்டர் அடையாளப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று, கோம்பாக் மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் அபாங் காதேரி அபாங் வாஸ்லி (Supt Abang Kaderi Abang Wasli) கூறினார்.
உயிரிழந்த பெண்,ஓட்டி வந்த கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் வலதுபுறம் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியதாக நம்பப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த மாணவியைப் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் (அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துதல்) போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.





















