ஜூபா:
வடஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் விமானி உள்பட 18 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியையொட்டி விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எனினும் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு சூடான் அரசு தெரிவித்துள்ளது.