கிள்ளான் பள்ளத்தாக்கில் ரயில் பாதையில் சாய்ந்த மரம் – KTM, ETS சேவைகள் ஸ்தம்பிப்பு!

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்ததால், KTM Komuter மற்றும் ETS ரயில் சேவைகளில் இன்று கடும் இடையூறு ஏற்பட்டது.

கெப்போங் மற்றும் ரவாங் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மரம் விழுந்ததில் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் மேல்நிலை மின்கம்பி அமைப்பும் கடுமையாகச் சேதமடைந்தது.

இதனால் அப்பகுதியில் இயக்கப்படும் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் சுமார் 60 நிமிடங்களுக்கும் மேலாகத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவலறிந்த KTMB தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, தண்டவாளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் பணிகளிலும் மின்சார அமைப்பைச் சீரமைக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் சேவைகளின் நேரலை நிலவரங்களை அறிந்து கொள்ள பயணிகள் KTMB-யின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here