பீகார் சட்டசபை தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும்

பீகார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. “பீகார் தேர்தல் உரிய நேரத்தில் நிச்சயமாக நடக்கும்” என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here