உச்சநீதிமன்ற லோகோவில் இந்த வாசகமா?

உச்சநீதிமன்றத்தின் லோகோவில் முன்னதாக சத்யமேவ ஜெயதே எனும் வாசகம் இடம்பெற்று இருந்ததாகவும், தற்சமயம் இது யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே என மாற்றப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், உச்சநீதிமன்ற லோகோவில் யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே எனும் வாசகமே ஆரம்பத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்து உள்ளது.

மூத்த செய்தியாளரான புன்யா பர்சுன் பாஜ்பாய் தேசிய சின்னத்தின் புகைப்படங்களுடன், உச்சநீதிமன்றத்தின் லோகோ மாற்றப்பட்டுவிட்டது. சத்யமேவ ஜெயதேவுக்கு மாற்றாக யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே என மாற்றப்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

வைரல் பதிவுகளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள உச்சநீதிமன்ற வலைதளத்தில் உள்ள லோகோ ஆய்வு செய்யப்பட்டது. அதில் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் சின்னத்தில் யதோ தர்ம ஸ்டேடோ ஜெயஹே என்ற வாசகமே துவக்கம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று உச்சநீதிமன்ற லோகோவில் உள்ள வாசகம் மாற்றப்படவே இல்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here