நாளை சந்திர கிரகணம்; மலேசியாவில் காணலாம்

மலேசியாவில் நாளை சந்திர கிரகணம் இரவு 7:16 மணிக்குத் தொடங்கி இரவு 9:49 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சந்திர கிரகணம் இரவு 7:18 மணிக்கு காண முடியும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும் போது , வளி மண்டலத்திலுள்ள ஒளிச் சிதறல் காரணமாக வழக்கத்தை விட பெரிதாகவும் இரத்த சிவப்பு நிறமாக்க தெரிவதனால் இதனை இரத்த நிலா என்றும் சுப்பர் மூன் என்றும் அழைக்கின்றனர்.

சூரியன் – பூமி – சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல், சந்திரனின் மீது விழுவதால் சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. பொதுவாக சந்திர கிரகணம் பெளர்ணமி தினத்தில் வரும்.2021ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 26ம் தேதி புதன் கிழமை தோன்றவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here