மகாராஷ்டிர கட்டிட விபத்து, 125 பேர் சிக்கியிருக்க…

மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தின் மகாட் என்ற பகுதியில் அமைந்துள்ள 5 மாடி கட்டிடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

47 குடியிருப்புகளை கொண்டிருந்த அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் 130-க்கும் அதிகமானோர் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கட்டிடத்தில் மொத்தம் எத்தனை பேர் வசித்து வந்தனர் என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு சிலமணிநேரத்திற்கு முன்னர் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.

ஆனால், கட்டிடம் நேற்று மாலை இடிந்து விழுந்தபோது அந்த இடிபாடுகளுக்குள் 70-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மீட்பு பணியின் போது தற்போதுவரை 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 1 நபர் உயிரிழந்துள்ளார்.

மகாட் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. பரத் கோஹவாலி விபத்துக்குள்ள கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 100 முதல் 125 வரை சிக்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் இதுவரை 15 பேரை மீட்டுள்ளோம் எனவும், இந்த இடிபாடுகளுக்குள் குறைந்தது 70 பேர் சிக்கி இருக்கலாம் எனவும் ராய்காட் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மீட்பு பணிகள் முழுமையடையும் பட்சத்தில் தான் கட்டிட இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கினர் என்ற உண்மையான எண்ணிக்கை வெளிவரும் என்ன பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும்படி மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here