தொழிலாளர்கள் நலனை அரசு உறுதி செய்யும்

ஷா ஆலம் –

தொழிலாளர்கள் நலனை அரசு உறுதி செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்தார்.

பல தொழிற்சாலைகளில் மீது வரும் தொழிலாளிகளின் புகார்களை மனிதவள அமைச்சு கவனமாக விசாரித்து வருவதாகவும் அமெரிக்காவில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நம்நாட்டு கையுறை நிறுவனத்தின் மீதான விசாரணையை மனிதவள அமைச்சின் அதிகாரிகள் முறையாக விசாரித்து வருவதாகவும் அதற்கான விளக்கத்தை பெறவே இன்று இந்நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வந்ததாகவும் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

டோப் குளோப் கையுறை தொழிற்சாலையின் செயல்பாடுகளை அமைச்சரிடத்தில் விளக்கிய அத்தொழிற்சாலையின் நிர்வாகிகள் அரசின் பரிந்துரைகளை முறையாக பின்பற்றி வருவதாகவும் தொழிலாளிகளின் நலனில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here