ஊரடங்கால் கேள்விக்குறியான சுற்றுலா தொழில்!

கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி, சுற்றுலா தொழிலையே நம்பி இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வேன், மற்றும் வாடகை கார்களை வைத்து பிழைப்பு செய்து வரும் ஓட்டுனர்கள் , சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா தளங்களில் சிறிய கடை வைத்திருப்பவர்கள் ,குடிசை தொழிலாக ஹோம் மேடு சாக்லேட் செய்பவர்கள் என சுற்றுலா பயணிகளையே நம்பி 1000த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடபட்டதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. கடந்த 5 மாதமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் வாடகை கார்கள் இயக்காமல், வாகனங்களில் உள்ள பேட்டரி பழுதாகி விட்டதாக கூறுகின்றனர் வாடகை கார் ஓட்டுநர்கள்.

இது ஒருபுறம் இருக்க ஹோம்மேடு சாக்கலேட் தயாரிப்போரின் நிலையோ மிக மோசம் கடந்த 5 மாதத்தில் மட்டும் 20 டன் ஹோம்மேடு சாக்கலேட் வீணாகிபோனதாக வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுலா பணிகள் வருகை இல்லாததால் கட்டட வேலைக்கு செல்வதாக கூறும் வழிகாட்டிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றும் ஆதங்கத்துடன தெரிவிக்கின்றனர்.

எனவே, வரும் நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா யணிகளை குறைந்த அளவிலாது அனுமதிக்க வேண்டும் என்பதே சுற்றுலாவை நம்பி வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here