வூஹானில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு

உலகில் முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வூஹான் அரசு வெளியிட்ட அறிக்கையில்,

சினாவின் வூஹான் நகரம் முழுவதும் 2,842 கல்வி நிறுவனங்களில் 10.4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கரோனா தொற்றால் கடந்த ஜனவரி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு மழலையர் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்து நிறுவனங்களும் செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட உள்ளது.

கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள், முகமூடி கட்டாயம் அணிய வேண்டும், முடிந்த அளவு பொது போக்குவரத்தை தவிர்க்குமறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வி நிறுவனங்கள் நோய்க் கட்டுப்பாட்டு கருவிகளை போதுமான அளவு சேமித்து வைக்கவேண்டும், நாள்தோறும் சுகாதார அறிக்கையை அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பள்ளியில் இருந்து அழைப்பு வராத வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் வூஹானில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here