மத்திய அரசு பொது முடக்க தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்குகளில் அவ்வப்போது தளர்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. பேருந்துகள் ஓடாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், நான்காம் கட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இ பாஸ் முறையை ரத்து செய்யப்படும், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும், திறந்தவெளி திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படும், மாநிலத்திற்குள் சென்றுவர கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது ஆகியவை இதில் அடக்கம். இதனை தொடர்ந்து, மாநில அரசும் பேருந்துகளை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.