ஒரு நல்ல கழிவு மேலாண்மை முறையை நிறுவும் முயற்சியில் லங்காவியைச் சுற்றியுள்ள ஆறு தீவுகளில் கடற்கரை சுத்தம் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்களை நியமிக்கும் திட்டத்தை வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சகம் (கே.பி.கே.டி) பரிசீலித்து வருகிறது.
அதன் துணை மந்திரி டத்தோஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்து முத்தலிப், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் ஆறு தீவுகள் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை அவசியம் என்று கூறினார்.
ஆறு தீவுகள் புலாவ் பெராஸ் பாசா, புலாவ் அனாக் திக்குஸ் , புலாவ் தெலுக் டாலாம், புலாவ் தெலுக் மெம்பலாம், புலாவ் குவா செரித்தா ,புலாவ் பாசிர் பஞ்சாங் ஆகியவையாகும்.
இதுவரைசிந்த இந்த ஆறு தீவுகளும் துப்புரவுச் சலுகையில் சேர்க்கப்படவில்லை, ஆனால் தன்னார்வலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன என்று அவர் கூறினார்.
இங்குள்ள பாண்டாய் குடிதுறையில் பீச் காம்பர்” இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்கரை சுத்தம் செய்வதைக் கண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தீயணைப்பு, மீட்புத் துறை துணைத் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் வஹாப் மாட் யாசின், கெடா திடக்கழிவு மேலாண்மை பொது சுத்திகரிப்பு கழக இயக்குநர் ஜைதி துவா, லங்காவி சுற்றுலா நகர நகராட்சி மன்ற செயலாளர் நூருல் அஸ்யாதி அஹ்மாட் சல்மி திஹானிஸ் வளங்கள் நிர்வாக இயக்குநர் எஸ்.டி.என். ஷாஹருன் அஸ்லி அபுபக்கர் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.