இலங்கை மக்களின் கண்களுக்கு ஆபத்து!

இலங்கையில் தற்போது அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது.

இதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என கண் நோய் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பாதிப்பு ஏற்படுவதனை தவிர்ப்பதற்காக வெளி இடங்களுக்கு பயணிக்கும் போது கண்ணாடி அணிவது மிகவும் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் வைத்தியர் முதிதா கலதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here