இன்று முதல் பஸ் பாஸ் விநியோகம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து பேருந்தில், பயணம் செய்ய நாளை முதல் பஸ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை முதல் அந்தந்த மாவட்டத்திற்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் சென்னை மாநகரப் பேருந்துகளுக்கு மாதாந்திர பேருந்து கட்டண பாஸ், தினசரி பஸ் பாஸ் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மாதாந்திர கட்டணம் 1000 ரூபாய் கட்டி பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here