ஊடகப்பயனர்கள் ஒழுக்கத்தைப் பேணவேண்டும்

சமூகத்தில் ஒற்றுமையையும் நாட்டில் நல்லிணக்கத்தையும் பாதுகாக்க  நல்ல நடத்தை ஒழுக்கம்  என்ற ஐந்தாவது கோட்பாடு உட்பட ருக்குன் நெகாராவின் கொள்கைகளை எப்போதும் நிலைநிறுத்துமாறு சமூக ஊடகப் பயனர்கள் நினைவூட்டப்படுகிறார்கள்.

தேசிய ஒற்றுமைத்துறை  துணை  அமைச்சர்  டத்தோஶ்ரீ  டி லியன் கெர் சில சமூக ஊடக பயனர்களின் நிலையை பதிவேற்றும் போது, பயன்படுத்தும் சொற்களையும் பழக்கவழக்கங்களையும் பொருட்படுத்தாத மனப்பான்மை கவலை அளிக்கிறது. இப்படிச்செய்வதால் மேலும் நாட்டின் அமைதி  சீர்குலையும் என்றார் அவர்.

சமூக ஊடகங்களின் சக்தி மிகவும் பெரியது , செல்வாக்குமிக்கது, பல பயனர்கள் போலி அடையாள கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு முரட்டுத்தனமான கருத்துகளை  பதிவேற்றுகிறார்கள்.

நாங்கள் சமூக ஊடக பயிற்சியாளர்கள், சமூக ஊடக கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும், மேலும் சமூக ஊடகங்களில் சமநிலையும் இருக்க வேண்டும் என்று அவர் இன்று ருக்குன் நெகாரா வட்டவடிவ விவாதம் -5ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இருப்பதால் நாட்டின் பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க புதிய சட்டங்களை இயற்ற வேண்டிய அவசியமில்லை என்று  அவர்  மீண்டும் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலாக, தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் 1998 உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்துவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய  அமசங்கள் நிறைய இருக்கின்றன என்று அவர் கூறினார்.

கல்வி மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  ஆனால், ஒற்றுமையை வலுப்படுத்துவது என்பது குறுகிய காலத்தில் செய்யக்கூடிய , முடிவுகளை அடையக்கூடிய தல்ல என்று அவர் கூறினார்.

ஆத்திரமூட்டல்களைத் தூண்டிய அல்லது ஒற்றுமையை அச்சுறுத்தும் செயல்களைச் செய்த தனிநபர்கள் அல்லது கட்சிகளை அடையாளம் கண்டு அறிக்கை அளிப்பதன் மூலம் ஒத்துய்ழைப்புக் ‘கண்களாகவும் ஊடகத்தார் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அவர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here