மோசமான நடத்தையென்றால் நீக்கப்படுவர் – ஹாடி அவாங்

மோசமான நடத்தைக்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்று  பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் உறுப்பினர்களை எச்சரித்துள்ளார்.

நல்ல நடத்தைக்கு கட்சி மதிப்பளிக்கும். நெறிமுறைகளுக்கு எதிரானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் அவர் கூறினார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் நல்ல ஒழுக்கங்களைக் கொண்டுள்ளது கட்சி.. இஸ்லாத்திற்கும் ஒழுக்கத்திற்கும் முரணான ஒழுக்கக்கேடான ஒன்றை ஒருவர் செய்தால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர்.

பாஸ்கட்சியில் முதல் விஷயம் ஒழுக்கக்கேட்டின் அடிப்படையிலானது. இரண்டாவதாக, ஏதேனும் தவறான நடத்தை இருந்தால் நாங்கள் அதை சட்டத்திற்கு விட்டுவிடுவோம் என்று பி.என்  நிர்வாகத்தின் அரை ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்  இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மாநாட்டில் தனது உரையின் போது, ​​அப்துல் ஹாடி ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த போதிலும்,  (பிஎன்) முன்பு பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தை விட அதிகமாகச் சாதித்துள்ளது.

இரு நிர்வாகங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எவ்வாறு விஷயங்களைக் கையாண்டார்கள் என்பதில் தெளிவான வேறுபாட்டைக் காணமுடிந்து என்றார் அவர்.

பல வேறுபாடுகள் காட்டப்படலாம். முன்னதாக பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது, ​​அமைச்சர்கள் தங்களுக்கு முன் அரசாங்கத்தைப் பற்றி புகார் செய்வதில் மும்முரமாக இருந்தனர்.

பி.என் னில் இருப்பது சிறந்ததாக இருந்தது. அங்கு நாங்கள் மலாய் கட்சிகளையும் ஆதரிக்கும் பிற கட்சிகளையும் ஒன்றிணைக்க முடிந்தது, மேலும் மக்களின் ஆதரவையும் பெற்றோம்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here