குழந்தையை திருடிய பெண் கைது

குழந்தை இல்லாத மகளுக்காக பிறந்து 25 நாட்களேயான குழந்தையை திருடிய பெண் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

டெல்லியின் லகோரி கேட் பகுதியில் உள்ள காரி பாய்லி அருகிலுள்ள நடைப்பாதையில் 25 வயது பெண் தனது இரண்டு மகன்களுடன் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் தூங்கியுள்ளார், இவரது கணவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்ததை அடுத்து குடும்பத்திற்காக பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அப்போது திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது பக்கத்தில் படுத்திருந்த பிறந்து 25 நாட்களேயான குழந்தையை மாயமானதை தொடர்ந்து குழந்தையை தேடி அலைந்துள்ளார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க இயலாமல் போனதை தொடர்ந்து அருகிலுள்ள லகோரி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனையடுத்து பெண் தூங்கி கொண்டிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது 58 வயது பெண் தூங்கி கொண்டிருந்த குழந்தையை திருடி கொண்டு போவதை கண்டறிந்துள்ளனர். குழந்தையை திருடிய பெண் உடனடியாக கைது செய்து குழந்தையை மீட்டனர். அதனையடுத்து குற்றம்சாட்டப்பட்டவருடன் நடத்திய விசாரணையில், அவர் காரி பாய்லி பகுதியில் ஸ்டால் ஒன்று நடத்தி வருவதும், அவருக்கு திருமணமான இரண்டு மகள்கள் உள்ளதும், அதில் ஒரு மகளுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் இந்த குழந்தையை திருடி தனது மகளிடம் ஒப்படைக்க எண்ணியதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here