கேரளத்தில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

திருவனந்தபுரம் கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், பத்தனம்திட்டா. ஆலப்புழை போன்ற மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங் களில் சாலைகளையும், பாலங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு. மலப்புரம் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு தீவிர மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை) விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here