சிறை சம்பாத்தியத்தில் மகளுக்கு…

மகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கித்தந்துள்ளார் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாசக்கார தந்தை. சட்டீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அம்தர்ஹா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷியா. இவரது வயது(40). இவரது மகள் யாமினி தற்போது 12 ம் வகுப்பு படித்து வருகிறதார். கடந்த 2005 ம் ஆண்டில் குடும்ப பிரச்னை காரணமாக உறவினரை வெட்டி கொன்ற வழக்கில் ஆனந்த் நாகேஷியாவுக்கு கோர்ட் 15 ஆண்டுகள் 5 மாத சிறை தண்டனையை விதிதத்து.அப்போது யாமினி பச்சிளம் குழந்தையாக இருந்துள்ளார்.சிறையில் இருக்கும் தந்தையை காண மாணவி யாமினி வருவது வழக்கம்.அவரிடம் ஆனந்த் நாகேஷியா படிப்பதற்கு என்ன வேண்டும் எனே கேட்டுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளி வகுப்பில் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருவதாகவும் தனக்கு ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் படிப்பிற்கு உதவியாக இருக்கும் என கூறி உள்ளார். சிறையில் இருக்கும் போது ஆனந்த் நாகேஷியா தச்சு மற்றும் தோட்டக்கலை வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் மூலம் சிறு பணத்தை சேமித்து வைத்திருந்தார்.சிறை நன்னடத்தை காரணமாக குறிப்பிட்ட கைதிகள் சிலரை விடுவிக்க மாநில அரசு முடிவு செய்து விடுதலை அளித்தது. அதில் ஆனந்த் நாகேஷியாவும் ஒருவர்.சிறையில் இருந்துவெளியே வந்த நாகேஷியா மகளுக்கு தேவைப்படக்கூடிய ஸ்மார்போனை வாங்கி தந்து மகிழ்ந்தார்.

இது குறித்து ஆனந்த்நாகேஷியாகூறியதாவது: சிறையில் இருந்த போது தான்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். என்மகள் டாக்டராகி மருத்துவத்துறையில் சேவை செய்ய விரும்பினார். அவரின் படிப்பிற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஸ்மார்ட் போன் வாங்கி தந்துள்ளேன் என கூறினார். ஆனந்த் நாகேஷயின் செயலை பாராட்டிய அம்பிகாபூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திர கெயக்வாட் கூறுகையில் குடும்பத்தில் சிறுமியின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் நாகேஷியா மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சிறையில் கைதிகள் சம்பாதிக்கும் பணம் குறைவாக இருப்பினும் அவர் தனது சேமிப்பை நல்ல காரணத்திற்காக முதலீடு செய்தார். என கூறினார். மேலும் நாகேஷியாகூறுகையில் எனக்கு மற்றும் என்னுடைய சகோதரர்கள் இரண்டு பேர்களுக்கு என மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. தோட்டக்கலைகளில் வாழ்வாதார பாதுகாப்பை எதிர்பார்க்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here