நாட்டின் புறப்பகுதிகளில் வேலை வாய்ப்புகள்

நாட்டின் மேம்பாடடையாத பகுதிகளில் தொழிற்புரட்சியை உருவாக்கும் முயற்சிகளுக்கு  முன்னுரிவை வழங்கப்படுமானால் அப்பகுதிகளிலிருந்து கோலாலம்பூருக்கு வேலை தேடி வரும் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க முடியும் என்று இரு பொதுநோக்கு ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

தொழில் வாய்ப்புகளுக்காக கோலாலம்பூருக்குப் படையெடுப்பதைத் தவிர்க்க கிராமப்புறங்களில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கினால் வேலை தேடுகின்றவர்கள் உள்ளூரிலேயே தேவையான வாய்ப்புகளைப் பெறமுடியும். இதனால்  செலவினங்களையும்  குறைக்க முடியும் என்கிறார் அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஷாஷ்வானி ட்ரானி.

தற்சமயம் கோலாலம்பூரில் மக்கள் எண்ணிக்கையும் வேலை தேடுகின்றவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. வேலை கிடைக்கின்றவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றும் கூறிவிட முடியாது. அவர்களுக்குத் தங்கிமிடம் கிடைப்பதில் பெரும் சிக்கலும் இருக்கிறது. இதனால் புறம்போக்கு குடிசைப்பகுதிகளும் உருவாகி விடுகின்றன.

பல தனியார் சமூகத்தொண்டர்கள் இலவச உணவு வழங்குவதால் உணவு பிரச்சினைகள் ஓரளவு தவிர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தங்களின் சொந்த ஊரிலேயெ  ஏற்ற வேலைகள் கிடைக்குமானால் கோவிட் பரவதலையும் கட்டுப்படுத்த முடியும்.

கோவிட் -19 காரணமாக வேலை இழந்தவர்களில் பலர் மாற்று வேலையில்லாமல் கையேந்தும் நிலைக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் சிறந்த வழியாக நாட்டின் புறப்பகுதிகளில் தொழில் விருத்திகளை உருவாக்குவதுதான். சுய தொழில் செய்யவும் அரசாங்கம் தூண்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here