பத்திரிகையாளர்களுக்கு ஒரு காலத்தில் அரசியலும் அரசியல் தலைவர்களும் பெரிய சவாலாக இருந்தனர். ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி அனைவரும் ஒன்றாக இருப்பதை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அன்றைய காலகட்டத்தில் தினமும் பத்திரிகை படிக்கும் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை மாறி விட்டது. ஆனால் சமுதாயத்தை வழி நடத்தும் கடமை பத்திரிக்கைக்கு இருக்கிறது என்று தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் தமதுரையில் தெரிவித்தார்.
அந்த வகையில் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் சேவை அளப்பரியது என்றார். அவருக்கு இவ்வேளையில் அவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்புறுதியை எடுத்து கொடுக்க வேண்டும் என்பதே என்றார்.
மொழி அழிந்தால் இனம் அழிவை நோக்கி செல்லும் என்பதால் மொழியை பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமை என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டார். மொழியை பாதுகாக்க நம்மில் பலர் போராடி வருகிறோம்.
ஆட்சி மாறினாலும் தலைவர் மாறினாலும் மொழியை காப்பாற்றும் பொறுப்பு மாறக் கூடாது என்றும் அவர் மலேசிய தமிழ் பத்திரிகை சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கொண்ட வேண்டுகோளை விடுத்தார்.
ஜெயபக்தி குயில் டத்தோ கு.செல்வராஜு, SMC இயக்குநர் சுரேந்திரன், டத்தோ குமாரராஜா, பிரதமரின் இந்திய சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் குடும்ப தின விழாவிற்கு உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல்லுளங்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். குடும்ப தின விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. என் தலைமையில் என்னால் முடிந்தளவிற்கு சங்க வளர்ச்சிக்கு உதவிக்கரம் வழங்கி வருகிறேன். எனக்கு அடுத்ததாக வரும் தலைவரும் சங்கத்தை வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இவ்விழாவிற்கு 10,000 ரிங்கிட் வழங்கிய டத்தோ ஶ்ரீ சரவணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.











