அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்து 91 ஆயிரத்து 058 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44,507 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 63,35,244-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 1,094 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,91,058 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கலிஃபோா்னியா மாகாணத்தில் 726,377 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 13,490 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக டெக்ஸாஸில் 6,55,980 பேரும், புளோரிடாவில் 6,37,013 பேருக்கும் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர நியூயாா்க்கில் 4,69,215 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.