கோலாலம்பூர் –
மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்கும் குறைவாக தனிநபர் மோட்டார் சைக்கிள், கார்களின் சாலை வரியைப் புதுப்பிக்காதவர்கள் இனி புஷ்பாகோம் எனப்படும் வாகனப் பரிசோதனை மையத்தின் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை.
அவர்கள் தங்கள் வாகனங்களுக்கான சாலை வரியை இந்தப் பரிசோதனைக்குச் செல்லாமல் புதுப்பித்துக்கொள்ளலாம். இந்தச் செயல் முறை நாளை தொடங்கி அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 12 மாதங்கள் தொடங்கி 36 மாதங்களுக்கு உட்பட்டு சாலை வரியைப் புதுப்பிக்கப்படாத வாகனங்களுக்கு இந்தச் செயல்முறையைப் பயன்படுத்தலாம்.
அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் சாலை வரியைப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் மைசீக்காப் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் 36 மாதங்களுக்கு மேலாகியும் சாலை வரி புதுப்பிக்கப்படாத வாகனங்கள் இந்த புஷ்பாகோம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.