‘எம்ஜிஆர் உருவத்தில் விஜய்’

தேனியில் எம்ஜிஆர் உருவத்தில் விஜய்யை சித்தரித்து ஓட்டப்பட்ட விஜய் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா உருவத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவையும், எம்ஜிஆர் உருவத்தில் விஜய்யையும் எடிட் செய்து போஸ்டர் ஓட்டப்பட்டு இருந்தது. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் ரசிகர் மன்றம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து விவேகானந்தரை போல விஜய்யை சித்தரித்து போஸ்டர் ஒட்டியதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியது.

இன்று காலை மீண்டும் ‘ 2021இல் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வர வேண்டும் 2ஆம் புரட்சி தலைவரே’ என குறிப்பிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் கெட் அப்பில் விஜய்யின் உருவத்தை சித்தரித்து தேனியில் போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற போஸ்டர்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எம்ஜிஆரை போல விஜய்யை எடிட் செய்து விஜய் ரசிகர்கள் சார்பில் ஓட்டப்பட்ட போஸ்ர் கிழிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியதால் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here