கொள்ளையடித்துவிட்டு இன்ஸ்டா ஐடி கொடுத்த கொள்ளையன்

சமீபத்தில் கலிபோர்னியாவில் நடந்த வழிப்பறி கொள்ளை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மான்ஹாட்டன் கடற்கரையில் நடந்த இந்த வழிப்பறி கொள்ளை சம்பவத்தின் போது சம்பவத்தோடு தொடர்புடைய குற்றவாளியும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபரும் இன்ஸ்டாகிராம் ஐடியை பகிர்ந்து கொண்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மான்ஹாட்டன் கடற்கரை காவல்துறையினரின் அறிக்கையின்படி, இந்த சம்பவம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றுள்ளது. சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள ரோஸ்கிரான்ஸ் அவென்யூ வழியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஆயுதம் தாங்கிய சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அவரை மடக்கி, பளபளப்பான வெள்ளி நிறமுடைய கைத்துப்பாக்கியை கொண்டு மிரட்டி உள்ளார். தனக்கு பணம் வேண்டும் என மிரட்டிய அந்த வழிப்பறிக் கொள்ளையனிடம் பாதிக்கப்பட்ட நபர், தன்னிடம் வெறும் செல்போனும் ஏடிஎம் கார்டு மட்டும்தான் இருக்கிறது என கூறியுள்ளார்.

உடனே சற்றும் மனம் தளராக வந்த வழிப்பறிக் கொள்ளையன் பாதிக்கப்பட்ட நபரை தனது காரில் ஏறும்படி கூறியுள்ளார். இவரும் பயந்து போய் காரில் ஏறியதும் அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று அங்கிருந்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளான்.

அவ்வாறே பாதிக்கப்பட்ட நபர் தனது ஏடிஎம் கார்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்ததும், அந்த வழிப்பறிக் கொள்ளையன் எங்கு பாதிக்கப்பட்ட நபரை சந்தித்தாரோ அங்கேயே மீண்டும் மிகவும் பாதுகாப்பாக தனது காரிலேயே கொண்டு போய் சேர்த்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் அங்கிருந்து கிளம்பி செல்வதற்கு முன் குற்றவாளி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here