கோவிட்-19 பரிசோதனை; மத்திய அரசு எளிமைப்படுத்தியது

கோவிட்-19 பரிசோதனை செயல்முறையை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கோவிட்-19 தேசிய பணிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, பரிசோதனைச் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளின் மூலம், மாநில முகமைகளுக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டு, அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக ஒரு நாளைக்கு 11.70 லட்சம் பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் தற்போது 1647 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இது வரை நாடு முழுவதும் 4 கோடியே 77 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகளை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here