நல்ல சத்தியா அல்லது தீய சக்தியா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் வீட்டில் குடி கொண்டிருக்கும் சக்தி, நல்ல சத்தியா அல்லது தீய சக்தியா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

நிறையப் பேருக்கு தங்களுடைய வீட்டில், தங்களையும் அறியாமல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்வார்கள். எல்லோருக்கும் இந்த உணர்வு வரும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு சில பேருக்கு இப்படிப்பட்ட உணர்வு கட்டாயம் இருக்கும். அதாவது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், இவர்களாகவே எதையாவது ஒன்றை கற்பனை செய்து கொண்டு, நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் குடிகொண்டு விட்டதோ, என்ற சந்தேகத்தை உண்டாக்கி கொள்வார்கள். தேவையில்லாத மன பயமும் மனக்குழப்பமும் இதனால் இருக்கும்.

அதாவது, வெளிப்படையாக சொல்லப் போனால், நம் வீட்டில் பேய் பிசாசு குடிகொண்டு விட்டதோ என்று கூட சிலர் சிந்திப்பார்கள். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. எந்த ஒரு கெட்ட ஆத்மாவும் எந்த ஒரு வீட்டிலும் அவ்வளவு சுலபமாக நுழைந்துவிட முடியாது என்று சொல்கிறது சாஸ்திரம். உங்களுடைய தேவையில்லாத கற்பனையும், பிரமையும் இப்படிப்பட்ட பயத்தையும் குழப்பத்தையும் உண்டாக்கலாம்.

சரி, உங்கள் வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கின்றது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கின்றதா? உங்களுடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கட்ட சக்தி ஆதிக்கம் செய்வதாக, நீங்கள் உணர்வதாக இருந்தால், இந்த சோதனையை உங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம். இதை செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்களது மன பயத்தைப் போக்கிக் கொள்ளவே இந்த குறிப்பு, உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

பொதுவாகவே பூஜை அறையில் நாம் ஏற்றும் தீபத்தை பார்த்தால் தீபத்தின் கீழ் பக்கம் நீல நிறத்தில் எரியும். மேல் பக்கம் மஞ்சள் நிறத்தில், அதாவது நெருப்பு வண்ணத்தில் எரியும். எல்லா தீபச் சுடரும் இந்த வண்ணத்தில் தான் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எந்த ஒரு வீட்டில் தீபத்தின் கீழ்ப்பக்கம் மஞ்சள் நிறமாகவும், மேல்பக்கம் நீல நிறமாகவும், எரிகின்றதோ, அந்த இடத்தில் கட்டாயம் ஏதோ ஒரு கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் இருக்கின்றது என்பது அர்த்தம்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் சாதாரணமாக கீழே நீல நிறம், மேலே மஞ்சள் நிறமாக தீபம் எரியலாம். உங்கள் வீட்டு பூஜையறையில் 1 மண் அகல் தீபம் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அது சாதாரணமாக எப்போதும் போலவே எறியட்டும். அந்த தீபத்தை கொண்டு வந்து, உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா அறைகளிலும் 5 நிமிடங்கள் வைத்து, அந்த சுடரை உற்று கவனிக்க வேண்டும். அப்படி அந்த சுடரானது, கீழே மஞ்சள் நிறத்தோடு, மேலே நீல நிறத்தோடு மாறி எரிய தொடங்கினாள், உங்களுடைய வீட்டில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம்.

ஆனால், கட்டாயமாக இப்படி தீபத்தின் சுடர் மாரி எரிவதற்கு வாய்ப்பே கிடையாது என்று கூட சொல்லலாம். அதாவது கோடியில் ஒருவரது வீட்டில் வேண்டுமென்றால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் இருக்குமே தவிர, நம்முடைய எல்லோரது வீட்டிலும் இப்படி கெட்ட ஆத்மாக்கள் வந்து தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது.

சிலபேருக்கு கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். தேவையில்லாத பேய் படங்களை எல்லாம் பார்த்து விட்டு, தங்களுடைய மனதை போட்டுக் குழப்பிக் கொண்டு, இப்படிப்பட்ட பிரச்சனை நம்முடைய வீட்டில் இருக்குமோ? என்று அவர்களே சிந்தித்து மனக் குழப்பத்துக்கு ஆளாகி விடுவார்கள். தயவு செய்து யாரும் குழம்ப வேண்டிய அவசியமே கிடையாது. உங்களுக்கு மன குழப்பம் இருந்தால், இப்படி பரிசோதனை செய்து, உங்களுடைய மனதை நீங்களே சரி செய்து கொள்வது தான் நல்லது.

சரிங்க, அப்படி சோதித்து பார்த்துவிட்டு அந்த இடத்தில் மட்டும் சுடர் கீழ்ப்பாக்கம் மஞ்சளாகவும், மேல் பக்கம் நீல நிறத்திலும் எரிந்து விட்டது. இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம். தினமும் அதே இடத்தில் தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு டம்ளரில் தண்ணீரை வைத்து, மனதார குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். எங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. ஏதாவது பிரச்சனை இருந்தால் கூட, அது கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விட வேண்டுமென்று அவ்வளவுதான். 48 நாட்களும் அந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை ஊற்றி விட்டு, மீண்டும் புதியதாக தண்ணீர் வைக்க வேண்டும்.

இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினை கட்டாயம் தீரும். இந்த பரிகாரத்தை மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டில் செய்யலாம். அமாவாசை தினத்தில் தீபத்தை ஏற்றி, சோதித்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பு, தீபச்சுடர் மீண்டும் சாதாரணமாக கீழ்ப்பக்கம் நீல நிறத்திலும், மேல்பக்கம் மஞ்சள் நிறத்திலும் கட்டாயம் மாறி எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here