‘சிங்கம்’ பட போலீஸ் போல நடக்க வேண்டாம்

ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 131 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் காணொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

கொரோனா பெருந்தொற்று நேரத்தில் போலீசார் ஆற்றிய தொண்டு மூலம் மக்கள் மத்தியில் காவல்துறையினர் மீ‌தான மதிப்பு அதிகரித்துள்ளதாக பிரதமர் கூறினார். யோகா மற்றும் பிராணாயாமம் மூலம் மன அழுத்தத்தை போக்கி கொள்ளலாம் என தெரிவித்த அவர் மனப்பூர்வமாக பணியாற்றுங்கள் என அறிவுரை வழங்கினார். சிங்கம் மாதிரியான திரைப்படங்களில் வரும் சூப்பர் போலீஸ் கதாபாத்திரங்களைப் போன்று தங்களை நினைத்து கொள்ள வேண்டாம் எனக் கூறிய பிரதமர் மோடி, இதனால் உண்மையான பணியை செய்ய முடியாமல் போய்விடுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் டெக்னாலஜியை கவனமாக கையாண்டு பணியில் திறம்பட செயல்படவும் அறிவுறுத்தினார். காஷ்மீரை சேர்ந்த இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுப்பதில் பெண் போலீசாரின் பணி மிகமுக்கியமான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். அப்போது, தமிழகத்தை சேர்ந்த கிரண் ஸ்ருதி என்ற பெண் பயிற்சி அதிகாரி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here