நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேயிலை விலையில் சரிவு ஏற்பட்டதால், தேயிலை விவசாயிகள் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தேயிலையின் விலை படிப்படியாக அதிகரித்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு A கிரேடு பசுந்தேயிலை ஒருகிலோ 32 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலை போகிறது. B கிரேடு தேயிலை ஒரு கிலோ 31 ரூபாய் முதல் 32 ரூபாய் வரையிலும், சாதாரண தேயிலை ஒரு கிலோ 28 ரூபாய் முதல் 29 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.
தற்போது மிதமான மழையும் பெய்து வருவதால், மகசூல் அதிகரித்து அதிக லாபம் கிடைக்கும் என தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே தேயிலை விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது விலை அதிகரித்ததால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








