புயலில் சிக்கிய சரக்குக் கப்பல்

பிந்துலு துறைமுகத்திலிருந்து 17 கடல் மைல் தொலைவில் ஏற்பட்ட புயல் காரணமாக கப்பல் ஒன்று கிட்டத்தட்ட மூழ்கியபோது அச்சரக்குக் கப்பலின் எட்டு ஊழியர்கள் பதட்டமான தருணத்தை எதிர்கொண்டனர்.

சரவாக் மலேசிய கடல்சார் அமலாக்கத்தின் (எம்.எம்.இ.ஏ) பிந்துலு கடல்சார் மண்டல செயல் இயக்குநர் கமாண்டர் எஃபெண்டி முகமட் ஃபாட்சில் கூறுகையில், பாதுகாப்பு உபகரணங்கள் வழி செல்ல முடிந்த அனைத்து குழு உறுப்பினர்களும் இரண்டு படகுகளில் இருந்த எம்.எம்.இ.ஏ பணியாளர்களாலும்  உள்ளூர் மீனவர்களின் குழுவினராலும் மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர், அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. முதற்கட்ட சோதனைகளில் அவர்கள் அனைவரும் 20 முதல் 71 வயதுக்குட்பட்ட இந்தோனேசியர்கள் என்று கண்டறியப்பட்டது.

புயல் காரணமாக சரக்குக் கப்பல் கிட்டத்தட்ட மூழ்கியது என்று அவர் ஓர்  ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்த கப்பலின் குழுவினர் பின்னர் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கடல் சமூகத்திற்கு, குறிப்பாக பிந்துலுவில் உள்ளவர்களுக்கு கடலில் இருக்கும்போது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் எல்லா நேரங்களிலும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிய வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here