குற்றவாளிகள் இருவர் மருத்துவமனையிலிருந்து தப்பினர்

இங்குள்ள மெஸ்ரா புக்கிட் பாடாங் மருதுவமனையில்  சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்றதாக நம்பப்படும் இரு ஆண் நோயாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கோத்தாகினபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி ஹபிபி மஜின்ஜி கூறுகையில், பிற்பகல் 3 மணியளவில் இரு நோயாளிகளும் அந்தந்த அறைகளில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அவர்கள் காணாமல் போயினர் என்றார்.

பிற்பகல் 3.45 மணியளவில் வழக்கமான வார்டு பரிசோதனையின் போது அவர்கள் காணாமல் போனதை மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கவனித்ததாக ஹபிபி கூறினார்.

முதல் சந்தேக நபர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (ஏ) இன் கீழ் குற்றவாளியாவார். கோத்தா கினபாலு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மனம் தொடர்பில்  இயலாமை சிகிச்சைக்காக கடந்த ஆண்டு மே 10 ஆம் தேதி தடயவியல் வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் இரண்டாவது சந்தேக நபர் தாவாவிலிருந்து தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் ஒரு குற்றவாளியாவார்.  கடந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி ஸ்கிசோஃப்ரினியாவுக்காக (schizophrenia)  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இருவரையும் பற்றிய தகவல்களைக் கொண்ட பொதுமக்கள் உடனடியாக பொறுப்பதிகாரி, இன்ஸ்பெக்டர் பழநிநாதன் பத்மநாதனை 016-412 2835 என்ற எண்ணிலோ அல்லது கோத்தாகினபாலு மாவட்ட போலீஸ் தலைமையகம் (ஐபிடி) ஹாட்லைன் 088-529220 அல்லது கோத்தாகினபாலு ஐபிடி பேஸ்புக் பக்கத்திலோ தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here