ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம் – ஜப்பான் அமைச்சர்

2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் சீகோ ஹஷிமோடோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருந்தது. இந்நிகழ்விற்காக ஜப்பான் பல ஆயிரம் கோடிகள் செலவிட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன. அதன்படி 2021, ஜூலை 23 என புதிய தேதி குறிக்கப்பட்டுள்ளது.கொரோனா இருந்தாலும், இல்லையென்றாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி திங்களன்று அறிவித்தது. இன்று (செப்., 8) ஒலிம்பிக்கிற்கான அமைச்சர் ஹஷிமோடோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிக்காக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்படுகிறார்கள்.

விளையாட்டு வீரர்களும் அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு கணிசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.நாங்கள் எப்பாடு பட்டாவது விளையாட்டுகளை நடத்துவோம். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் எங்களின் அனைத்து முயற்சிகளும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here