சர்வதேச அளவில் 100-வது கோல்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில், தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி உள்ளூர் அணியான சுவீடனுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45 மற்றும் 72 வது றிமிடத்தில் கோல் அடித்த போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் அடித்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100- (165 ஆட்டம்) ஆக உயர்த்தினார்.

மேலும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here