2,200 ராணுவ வீரர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா

ஈராக்கில் உள்ள தீவிரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக 5 ஆயிரத்து 200 ராணுவ வீரரக்ளை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போதைய சூழலில் அந்த பணியை ஈராக் ராணுவமே செய்ய முடியும் என்று நம்புவதால், முதல் கட்டமாக 2 ஆயிரத்து 200 வீரர்களை திரும்ப அழைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, வரும் காலத்தில் படிப்படியாக மற்ற வீரர்களும் திரும்ப அழைக்கப்படுவார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்களுக்கு எதிரான ஈராக் இராணுவத்தின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வித்தத்தில் இருப்பதாக அமெரிக்கா தாந்து கூடுதல் ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here