ரஷியாவில் இந்திய, சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் பயணமாக ரஷியா சென்றுள்ளார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி-ம் பங்கேற்றார்.

இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த மாநாட்டுக்கு மத்தியில் ரிக் (ரஷியா, இந்தியா, சீனா) நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டுக்கு இடையில் மதிய உணவு நேரத்தின்போது ரஷியா, இந்தியா, சீனா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சாஹோ லிஜியான் கூறினார்.

ரிக் கட்டமைப்பின் கீழ் 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் அவ்வப்போது சந்தித்து தங்கள் நலன்களின் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது வழக்கமாக உள்ளது. எனினும் லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மீண்டும் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் இந்தியா சீனா வெளியுறவு மந்திரிகள் இடையிலான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here