இப்படி சொல்லிட்டாரே ஓவியா!

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை. ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார்.

இவர்களின் திருமணம் சமீபத்தில் இஸ்லாமிய முறைப்படி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னனிலையில் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் நண்பர்கள் சிலர் கலந்துகொண்டனர். ஆனால், ஓவியா திருமணத்திற்கு வரவில்லை. இத்தனைக்கும் ஓவியால்தான் ஆரவ் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் இருவரும் ஒன்றாய் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்த புகைப்படங்களும் வெளியானது.

எனவே, ஆரவ் திருமணம் பற்றி ஓவியா ஏதேனும் கருத்து தெரிவிப்பார் என நெட்டிசன்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ‘இந்த உலகம் மிகவும் அபாயகராமானது. அது தீய செயல்களை செய்பவர்களால் அல்ல. அது எதுவும் செய்யாமல் இருப்பவர்களால்தான்’ என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் வாழ்த்து சொல்வார்னு பார்த்தா இப்படி சம்பந்தம் இல்லாம இப்படி ஒரு கருத்தை கூறியிருக்கிறாரே என குழம்பி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here