விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண்கள் கைது

டாமான் சாரா வட்டாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரண்டு பெண்களை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் வெளிநாட்டினர் என்பதோடு மலேசியாவில் எந்த ஒரு நிறுவன பெர்மிட்டும் அவர்களிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட அப்பெண்களிடம் இருந்து விலையுர்ந்த கைப்பை, 3 கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ஏசானி தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட அப்பெண்கள் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்றார். மேலும் அவர்கள் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படும். செக்‌ஷன் 372b சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here