நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது திமுக

தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டிஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல், லடாக் எல்லை பிரச்னை, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை விடுமுறை ஏதும் இல்லாமல் நடைபெற உள்ள கூட்டத்தொடரில், மொத்தமாக 47 மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு பிரச்னை குறித்து திமுக எம்பி டி.ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பேசிய அவர், நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் வருங்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிப்பதாகவும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தப்படுவதால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த சபா நாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, எழுத்துப் பூர்வமான பதில் திருப்தி அளிக்காவிட்டால் கூடுதல் கேள்விகளை எழுத்து மூலம் கேட்கலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here