செராஸ் தாமான் செமிலின் பகுதியில் இன்று காலை 5.59 மணியளவில் உணவகத்தில் தீ பிடித்திருப்பதாக தகவல் அறிந்ததுடன் 11 நிமிடத்தில் விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் 6.24க்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
3 உணவகத்தை உள்ளடக்கிய இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர ஜாலான் ஹன் துவா மற்றும் பண்டார் துன் ரசாக் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்டுப்படையை சேர்ந்த 36 வீரர்கள் தீயை காலை 8.20 மணியளவில் முழுமையாக அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படங்கள் : எல்.கே.ராஜ்