DBKL உள்ளாட்சித் தேர்தல்: மார்ச் இறுதியில் முழுமையான ஆய்வு அறிக்கை!

கோலாலம்பூர், பிப் 23:

கோலாலம்பூர் மாநகராட்சியில் (DBKL) உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு, வரும் மார்ச் மாதம் இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறுகையில், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் (UIAM) இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வரை அதன் நிலையில் மாற்றங்கள் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த ஆய்வுப் பணிகள் மார்ச் இறுதி வரை நீடிக்கும். கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இதற்கான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஜனவரி 28-ல் கூட்டரசு பிரதேசத் துறையிடம் வழங்கப்பட்டது,” என்று அவர் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here