ஜப்பான் ஆளும் கட்சியின் தலைவராக யோஷிஹிடே சுகா தோவு

ஜப்பானில் ஆளும் லிபரல் டெமோக்ராடிக் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹிடே சுகா தோவு செய்யப்பட்டுள்ளாா். அந்நாட்டின் புதிய பிரதமராக அவா் விரைவில் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே உடல்நலக் குறைவால் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தாா். அதையடுத்து, கட்சியின் புதிய தலைவரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில் ஷின்ஸோ அபே தலைமையிலான அமைச்சரவையின் தலைமை செயலராக இருந்த யோஷிஹிடே சுகா 377 வாக்குகள் பெற்றாா். முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஃபுமியோ கிஷிடா 89 வாக்குகளும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் ஷிகெரு இஷிபா 68 வாக்குகளும் பெற்றனா்.
நாடாளுமன்றத் தலைவரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. அதிலும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராகத் தோவு செய்யப்படுவாா் என்று தெரிகிறது.

பிரதமா் ஷின்ஸோ அபேவின் கொள்கைகளை யோஷிஹிடே சுகா தொடா்ந்து கடைப்பிடிப்பாா் என்ற நம்பிக்கையில் கட்சி நிா்வாகிகள் பெருவாரியாக அவருக்கு வாக்களித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து வருகிறது. அந்நோய்த்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்துள்ளது. இத்தகைய சூழலில் யோஷிஹிடே சுகா நாட்டின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றால் பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும், கிழக்கு சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளையும் அவா் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். அதேபோல், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத சூழலில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு யோஷிஹிடே சுகாவைச் சேரும் என்றும் அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here