இணையம் சார்ந்த செயல்பாடுகளுக்கான பாதுகாப்பு சேவைகளை வழங்கும் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் நிபுணர்கள் இணையத்தில் நிகழ்த்தப்படும் குற்றங்கள், அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்த அறிக்கை ஒன்றை தயார் செய்திருக்கின்றனர். இந்த அறிக்கையில் இந்த ஆண்டில் இணைய குற்றங்கள் மிகவும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காலத்தில் இணைய குற்றங்கள் அதிகமாகி உள்ளது. கொரோனா காலத்தில் எல்லோரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நேரத்தில் மக்களுக்கு இருக்கும் தேவையை பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சிகளை இணைய குற்றவாளிகள் அதிகம் திட்டமிட்டு செயல்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.