கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை

அடுத்தாண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்னில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ‘ ஒவ்வொரு மாதத்திற்கும் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசி மருந்துகள் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் கிடைக்க துவங்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும்.நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம்.

அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்’ இவ்வாறு டிரம்ப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here