தமிழில் கண்ணுக்குள் நிலவு, புன்னகைப்பூவே, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கல்யாணி. 2010ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் சூர்ய கிரணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே விவாகரத்து ஆனது தற்போது தெரியவந்துள்ளது. இவரின் கணவர் சூர்யா கிரண் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கல்யாணி விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் நடித்திருந்தார்.