கோலாலம்பூர் : கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (எச்.கே.எல்) சனிக்கிழமை (செப்டம்பர் 19) இரவு நான்காவது மாடியில் ஒரு ஸ்டோர் ரூம் தீப்பிடித்தது.பல நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மூத்த செயல்பாட்டு அதிகாரி ஹம்ஸா முகமட் ஈசா கூறுகையில், இரவு 11.07 மணிக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து தித்தி வாங்சா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்றனர்..
அவ்விடத்த்கோப்புகளைச் சேமிக்கப் பயன்படும் வளாகங்களில் சுமார் 10% ஏற்கனவே தீப்பிடித்திருப்பதைக் கண்டோம். உயிரிழப்புகள் ஏதும் இல்லை” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இரவு 11.35 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்றும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவ இடத்திலுள்ள சோதனைகளில் பல நோயாளிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.. மேலும் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) அதிகாலை 1.10 மணியளவில் அந்தந்த வார்டுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர் – பெர்னாமா