தந்தையும் மகனும் கடலில் தவறி விழுந்தனர்

முவாரில் உள்ள தஞ்சங்  மாஸ் நீர்ப்பகுதியில் தந்தையும் அவரது மகனும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

ஜைனல் 61 என்பவர் சிப்பிகளைத்தேடிக்கொண்டிருந்தபோது  படகில் இருந்து தவறிவிழுந்தார். இதை அறிந்த முகமது அஸ்வான் தனது தந்தையை மீட்பதற்காக நீரில் குதித்தார். ஆனால், இருவரும் காணாமல் போயினர்  என்று  தொடர்பு கொண்டபோது தீயணைப்பு அதிகாரி ஜெஃப்ரி ஜமால் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அழைப்பு வந்ததும்  20 பேர் கொண்ட குழு இரண்டு கடல் மைல் சுற்றளவில் ஒரு தேடலைத் தொடங்கியது, ஆயினும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை என்றார் அவர்.

இருள் சூழந்ததால் இரவு 7.10 மணியளவில் தேடல் இடைநிறுத்தப்பட்டது, காலை 7 மணிக்கு தேடல் தொடரும் என்று மொகமட் ஜெஃப்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here