ஆபாச படம் பார்த்து ரசித்த 4 பேர் கைது

ஆபாச படத்தை பார்த்து ரசித்த 4 பேரை பிடோ ஃபைல் என்ற சோதனை நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஜூலை வரை இவர்களின் நடவடிக்கைகளை பின் தொடர்ந்து கிள்ளான் பள்ளதாக்கு பகுதியில் அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வயது 29 முதல் 61 வரை என கோலாலம்பூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ சைபுல் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு கோலாலம்பூர் நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது  இரண்டும் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட  மேலும் 3 பேர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இவர்களிடம் இருந்து மடிக்கணினி, கணினி உள்ளிட்ட பல மின்பொருட்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆபாச படங்களை குறிப்பாக சிறார்களின் ஆபாச படங்களை காண்பது சட்டப்படி குற்றமாகும் என்று டத்தோ சைபுல் அஜிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

 

படங்கள்: எல்.கே.ராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here