கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தை பிறந்துள்ளது.உ.பி மாநிலம் தியோரியா மாவட்டம் கவுரி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த செவ்வாயன்று கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி., மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு அப்பெண்ணை கவனித்து வந்தனர். புதனன்று அவர் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாகவே அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

அதில் மூன்று குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஒரு குழந்தை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சையில் உள்ளது.இதுபோன்று நடப்பது மிகவும் அரிதானது என கூறியுள்ள மருத்துவர்கள், பிரசவம் சவால் மிகுந்ததாக இருந்தது என்றனர். பிரசவ தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்ததால் அவை 980 கிராம் முதல் 1.5 கிராம் வரையிலான எடைகளுடன் இருந்ததாக தெரிவித்தனர். நான்கு குழந்தைகளின் மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்காக நுண்ணுயிரியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here