மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு மணல் சிற்பம் வடிவமைத்து அஞ்சலி

பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், எஸ்பிபியின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று (செப். 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருடைய ரசிகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், சமூக வலைதளங்களிலும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய உடல், இன்று (செப். 26) அவருடைய சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் எஸ்பிபியின் பிரம்மாண்ட மணல் சிற்பத்தை வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

https://twitter.com/sudarsansand/status/1309530945221918720/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1309530945221918720%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Findia%2F583829-sand-art-for-spb.html%3Ffrm%3Drss_more_article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here