செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சுற்றுலா என்றால் நம்மில் மகிழாதவர்கள்
யாருமே இருக்க முடியாது. உலகம் முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. 1979ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா தினம் மூன்றாவது பொதுக்கூட்டத்தில் உலக சுற்றுலா தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 1980 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சுற்றுலா என்பது என்ன? அதன் முக்கியத்துவம், மக்களின் வாழ்க்கையில் சுற்றுலா எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? என்பதை எடுத்துக் காட்டவே இந்த நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1997 ஆம் ஆண்டு அக்டோபரில் துருக்கியில் நடந்த உலக சுற்றுலா நிறுவனம் கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டையும் நிகழ்வை நடத்த அழைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. சுற்றுலா உடன் நாட்டின் பொருளாதாரமும் அடங்கியிருக்கிறது என்பதுதான் இந்த நாளில் கொண்டாடப்படுவது அடிப்படை நோக்கம்.
இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி சுற்றுலா என பிரிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுலா பெரும் வருவாயை ஈட்டித் தரும் துறையாக உள்ளது. ஆனாலும் பல செலவுகளை கொண்டு உள்ளதையும் யாரும் மறுக்க முடியாது. சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித் தருவதாக இருந்தாலும், அதிக மக்கள் நடமாட்டம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நீர்நிலைகள் மாசடைதல் போன்றவையும் இருக்கத்தான் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.